ஜன. 16-
கோலத்திரெங்கானுவில் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 17 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து பதின்ம வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.
இன்று மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 17 வயது இளைஞர் மரணமுற்றதாக போலீசார் அடையாளம் கூறினர். அந்த ஆடவர் 14 ஆவது மாடியிலிருந்து குதிக்கும் தோரணையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்ததை தாம் கண்டதாக அந்த வீடமைப்புப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை என்ற போதிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக கோலத்திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் குறிப்பிட்டார்.