ஜன. 16-
ஜோகூர், ஆயர் ஹீத்தாம் முதல் குளுவாங் ஸ்ரீ லாலாங் வரையில் விவசாயிகளின் விளைச்சல் நிலைங்களை சேதப்படுத்தி வந்த ஆண் யானை ஒன்று வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.
ஜோகூர் மாநில வனவிலங்கு, தேசிய பூங்காத்துறையான Perhilitan உதவியுடன் அந்த ராட்ஷச யானை பிடிக்கப்பட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லியாங் தியான் சூன் தெரிவித்தார்.
கடந்த ஒரு வார காலமாக அந்த ஆண் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்த பெர்ஹிலித்தான் யானை பாகன்கள், நேற்று முன்தினம் காலை 11.15 மணியளவில் குடியானவர் ஒருவரின் விளைச்சல் நிலத்தில் அந்த யாளையை வளைத்துப் பிடித்ததாக அவர் குறிப்பிட்டார்.