ஜன. 16-
கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் இன்று காலையில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு, அவ்வழியை கடந்த போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் உதவி நல்கினார்.
மாதாந்திர பேரணியில் கலந்து கொள்வதற்காக தமது வீட்டிலிருந்து புக்கிட் அமானை நோக்கி சென்று ஐஜிபி சென்று கொண்டிருந்த போது காலை 7.37 மணியளவில் இந்த இந்த விபத்து நிகழ்ந்தது.
ரஸாருடினை ஏற்றி வந்த வாகனம், விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்த நிலையில் ஐஜிபி தனது வாகனத்தை விட்டு இறங்கி, சக போலீஸ்காரர்களின் உதவியுடன் காயமுற்ற மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவினார்.
விபத்தினால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் அதனை முறைப்படுத்துவதிலும் ஐஜிபி உதவிக் கரம் நீட்டியதை அந்த நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது.