ஜன. 16-
கோலாலம்பூர் மாநகரில் ஆபத்து நிறைந்த இடருக்குரிய 28 மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாக மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டாக்டர் மைமூனா ஷெரிப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் பல்வேறு பகுதிகளில் இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. எனினும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் உள்ள மரங்கள் தொடர்ந்து அடையாளம் காணப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று காலையில் கோலாலம்பூர், புடுராயா அருகில் ஜாலான் புடுவில் சுவிஸ் கார்டன் ஹோட்டல் முன்புறம் மரம் ஒன்று வேரோடு பெயர்த்தக்கொண்டு கார் மீது விழுந்ததில் 38 வயது மாதுவும் இளம் பெண் ஒருவரும் காயம் அடைந்தது தொடர்பில் கருத்துரைக்கையில் டத் தோ பண்டார் மேற்கண்டவாறு கூறினார்.