பேரக்குழந்தை பிறந்தது நஜீப்பை மகிழ்விலும் கவலையில் ஆழ்த்தியது

ஜன. 16-

தமது மகன் Muhamad Norashman- னின் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலையில், தற்போது பிறந்துள்ள பேரக்குழந்தையையும் அருகில் இருந்து, கொஞ்சி மகிழ முடியாமல் போனது தம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வேதனை தெரிவித்துள்ளார்.

எனினும் தமது குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வரவு தம்மை மனம் நெகிழச் செய்துள்ளது என்பதுடன் தமக்கு ஏற்பட்டுள்ள சோதனையை தாங்கிக்கொள்வதற்கு மனவலிமை இருப்பதாக நஜீப் தெரிவித்துள்ளார்.

பேரக்குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டு, தமது கண்கள் குளமாகியதாக இன்று வியாழக்கிழமை தமது முகநூலில் பதிவேற்றம் செய்த ஒரு செய்தியில் நஜீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS