ஜன. 16-
சரவா மாநிலத்தில் ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பில் மாநகர் மன்ற முன்னாள் டத்தோ பண்டார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
சரவாக், கூச்சிங்கில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனைகளின் வாயிலாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சட்டவிரோதப் பண மாற்றம் தடுப்பு பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக ஐஜிபி விளக்கினார்.
இதில் 53 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 32 கோப்புகள் பிறமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரஸாருடின் குறிப்பிட்டார்.