ஜன. 16-
சுமார் பத்து லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.
தொழிலாளர்களுக்கு உணவு, பானம் விநியோகம் தொடர்பில் 900 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள டெண்டரில் துணைக் குத்தகையை பெற்றுத் தருவதாக கூறி அந்த இயக்குநர் பத்து லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாக கேட்டு, பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட அந்த இயக்குநர், இன்று புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவரை வரும் திங்கட்கிழமை வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு SPRM-மிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.