ஜன. 16-
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். தனது Malaysia Airport Holdings Berhad பங்குகளை மிக குறைந்த விலையில் விற்பனை செய்து விட்டு, மிக குறுகிய காலத்திலேயே கூடுதல் விலைக்கு மீண்டும் வாங்கியது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை செய்ய வேண்டும் என்று மசீச.வும், கெராக்கானும் கேட்டுக்கொண்டுள்ளது.
பங்குகள் விற்பனையிலும், கொள்முதலிலும் இபிஎப்.பின் உள் ஆட்கள் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதால் அது குறித்து விரிவான விசாரணையை SPRM மேற்கொள்ள வேண்டும் மசீச மத்திய செயலவை உறுப்பினர் Quek Tai Seong கேட்டுக்கொண்டுள்ளார்.
MAHB பங்குகள் விற்கப்பட்ட விலைக்கும், அவற்றை மீண்டும் வாங்கிய விலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதில் நலன் சார்ந்த அ ம்சங்கள் இருக்கக்கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாக கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.