ஜன. 16-
2025 ஆம் ஆண்டின் ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா, ஆசியானின் நெருக்கமான ஒருங்கிணைப்பை செயல்படுத்துவதற்கு உறுதி பூண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஒருங்கிணைப்பின் வாயிலாக ஆசியான் பிராந்தியத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் எரிசக்தி முதலிய துறைகளுக்கான ஒருங்ணைப்பு வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப்பொருளாதார மண்டலம் , இதற்கு சிறந்த உதாரணமாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூருக்கு அருகில் உள்ள மாநிலம் என்ற நிலையில் ஜோகூர் தனது ஆற்றல் வாய்ந்த வளங்களின் மூலமாக அதிகமான முதலீட்டாளர்களை கவரும் என்பதுடன் உயரிய மதிப்பிலான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடர்பில் புத்ராஜெயாவும், சிங்கப்பூரும் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி கருத்திணக்க ஒப்பந்ததில் கையெழுத்திட்டு இருப்பதையும் பிரதமர் விளக்கினார்.