ஜன. 16-
அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் எடுப்பது தொடர்பில் அதற்கான விண்ணப்பத்தை திறப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தோட்டத் தொழில்துறையின் தேவையை கருத்தில் கொண்டு அந்நியத் தொழிலாளர்கள் மீண்டும் எடுக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதை அரசாங்கம் கடந்த ஆண்டு முற்பகுதியிலிருந்து முடக்கியது.
எனினும் தோட்டத் தொழில்துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிறைவு செய்யுமாறு தோட்டம் மற்றும் மூலப்பொருள் அமைச்சிடமிருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கு மீண்டும் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.