கிள்ளான், ஜன. 17-
தொழிலாளர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர், வயிற்று வலியினால் அவதியுற்று வருவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவரின் முதலாளி, ஈவுயிறக்கமின்றி அந்த ஆடவரை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று வெள்ளிக்கிழமை வரைலாகியுள்ளது.
இந்த சம்பவம் கிள்ளான், பூலாவ் கெத்தாமில் உள்ள ஒரு படகுத்துறையில் நடந்ததாக நம்பப்படுகிறது. அந்த படகுத்துறையின் ஐஸ் கட்டி தோம்பின் மீது அமர்ந்திருந்த நபர், தனது தொழிலாளி, வயிறு வலிப்பதாக கூறிய அடுத்த கணமே, தோம்பிலிருந்து இறங்கி, அந்த தொழிலாளர் கீழே விழும் வரையில் கண்மூடித்தனமாக தாக்கிய காட்சி அந்த காணொளியில் சித்தரிக்கிறது.
எனினும் அந்த தொழிலாளர் எதிர்த்துப் போராட மு டியாமல், ஒவ்வொரு அடியையும் வாங்கிக்கொண்டு இருக்கும் காட்சி, சமூக வலைத்தள பயனர்களை கவலையடைய செய்துள்ளது. சம்பந்தப்பட்ட முதலாளிக்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.