புதிய நீதிபதியைக் கொண்டு விசாரணை

கோலாலம்பூர், ஜன. 17-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக முன்னாள் ஆய்வியல் உதவியாளர் யூசோப் ராவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கு, புதிய நீதிபதியைக்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அவரின் வழக்கறிஞர் ரபிக் ரஷிட் அலி தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை விசாரணை செய்து வந்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நிதிபதி ஜோஹான் லீ, அடுத்த மாதம் முதல் அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றப்படுவதால் இவ்வழக்கை புதிய நீதிபதி ஒருவர் விசாரணை செய்வார் என்று யூசோப் ராவுத்தரின் வழக்கறிஞர் ரபிக் குறிப்பிட்டார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற காலஞ்சென்ற எஸ்.எம். முகம்மது இத்ரிஸின் பேரனான யூசோப் ராவுத்தர், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோலாலம்பூர் சிகாம்புட்டில் பிகேஆர் தலைவரின் இல்லத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக கூறி, டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக இந்த சிவில் வழக்கைத் தொடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS