ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் பெரும் உந்தும் சக்தியாகும்

கோலாலம்பூர், ஜன. 17-


மலேசியாவும் சிங்கப்பூரும் இணக்கம் கண்டுள்ள ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப்பொருளாதார மண்டலம், இரு நாடுகளுக்கும் பெரும் பலனை அளிக்கும் என்று மலேசியாவிற்கான சிங்கப்பூர் தூதர் வேணுகோபால் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், எல்லைத் தாண்டிய ஆசியான் உறவை வலுப்படுத்தும் அதேவேளையில் ஆசியான் முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துதலை வழங்கும் என்று வேணுகோபால் குறிப்பிட்டார்.

ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப்பொருளாதார மண்டலம் உண்மையிலேயே , மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்பப்படுத்தும்.

அத்துடன் இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை ஒரு சேர வளப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று எப்.எம்.டி.க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் வேணுகோபால் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS