செமினி, ஜன.17-
சிலாங்கூர் செமினி, பலாக்கோங்கில் உள்ள பலகை மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் கடந்த திங்கட்கிழமை, குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் பலகையடியிலும், கழிப்பறைகளிலும் ஒளிந்துக்கொண்ட சட்டவிரோத குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.
இவ்விரு தொழிற்சாலைகளிலும் சட்டவிரோதக்குடியேறிகள் அதிகளவில் வேலை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்கரியா ஷாபன் தெரிவித்தார்.
மொத்தம் 56 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. தொழிற்சாலையின் உரிமையாளரான சீன நாட்டுப்பிரஜை உட்பட வங்காளதேசம், தாய்லாந்து, மியன்மார் முதலிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் பயண ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.