ஜெம்புல், ஜன. 17-
சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டத்தை நம்பி, முதலீடு செய்த காப்புறுதி முகவர் ஒருவர், தனது இபிஎப். பணமான 6 லட்சம் ரிங்கிட்டை இழந்து, மோசம் போனார்.
அப்படியொரு முதலீட்டுத் திட்டமே இல்லை என்று தெரிய வந்த போது அதிர்ச்சிக்குள்ளான அந்த காப்புறுதி முகவர், இது குறித்து போலீசில் புகார் செய்து இருப்பதாக நெகிரி செம்பிலான், ஜெம்புல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹு சாங் ஹுக் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டப்பட்ட அந்த முதலீட்டுத் திட்டத்தில் தனது அந்திம கால சேமிப்புப்பணமான இபிஎப். பணத்தில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 546 ரிங்கிட்டை முதலீடு செய்து, அந்த காப்புறுதி முகவர் மோசம் போனதாக தமது புகாரில் தெரிவித்துள்ளார் என்று ஹு சாங் ஹுக் குறிப்பிட்டுள்ளார்.