கோலாலம்பூர், ஜன. 17-
1எம்.டி.பி. வழக்கில் தேடப்பட்டு வரும் மலேசியத் தொழில் அதிபர் ஜோ லோவுடன் நட்புறவு வைத்துக்கொள்வதிலிருந்து விலகியிருக்காமல் இருந்ததன் மூலம் ஓர் அமைச்சருக்கான நன்னெறி கோட்பாட்டை தாம் மீறிவிட்டதாக கூறப்படும் வாதத்தை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மறுத்துள்ளார்.
ஜோ லோவின் ஆடம்பர வாழ்க்கை மற்றும் வாழ்வியல் பாணியை கண்டதும் அவரிடமிருந்து தாம் விலக முற்பட்டது மூலம் ஓர் அமைச்சருக்கான நன்னெறி கோட்பாட்டை தாம் மீறிவிடவில்லை என்பது நிரூபணமாகிறது என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் 1எம்.டி.பி. வழக்கில் சாட்சியம் அளிக்கையில் முன்னாள் நிதி அமைச்சருமான நஜீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.