பாலிக் பூலாவ், ஜன. 17-
ஒரு செயற்கை துப்பாக்கி உட்பட தன் வசம் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததாக அலங்கார மீன் பராமரிப்பு வளாக உரிமையாளர் ஒருவர் இன்று பினாங்கு, பாலிக் பூலாவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
58 வயது சூன் ஹோய் ஜின் என்ற அந்த மீன் வளர்ப்பாளர், நீதிபதி அஸால் பாரிஸ் அகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 13 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் சுங்கை ஆரா, ஜாலான் டத்தோ இஸ்மாயில் ஹஷிம் சாலையில் தெனாகா நேஷனல் பெர்ஹாட்டிற்கு சொந்தமான மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் அந்த மீன் வளர்ப்பாளர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை மற்
றும் 6 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த மீன் வளர்ப்பாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.