கோலாலம்பூர், ஜன. 17-
அம்பாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுரைடா கமருடீனுக்கு விதிக்கப்பட்ட ஒரு கோடி ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை குறைத்து இருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிகேஆர் கட்சி, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீடு தொடர்பில் அனுமதி கேட்டு, கடந்த ஜனவரி 8 ஆம் கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டதாக பிகேஆர் கட்சி வழக்கறிஞர் நவ்பிரித் சிங் தெரிவித்தார்.
பிகேஆர் கட்சி சார்பில் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கட்சிவிட்டு கட்சி மாறிதற்காக அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான ஸுரைடா, பிகேஆர் கட்சிக்கு ஒரு கோடி ஒரு கோடி ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.
எனினும் புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி அளித்த தீர்ப்பில் ஒரு கோடி ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரிங்கிட்டாக குறைந்தது.