குவந்தான், ஜன.17-
சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு சிறைத் தண்டனை இல்லாமல்ர அபராத விதிப்புடன் வழக்கை முடித்துக்கொள்வதற்கு 2 லட்சம் ரிங்கிட்டிற்கு மேல் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக முன்னாள் மாஜிஸ்திரேட் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 58 ஆண்டு சிறைத் தண்டனையை குவந்தான் உயர் நீதிமன்றம் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்ட பத்து லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
முகமட் அமின் ஷாகுல் ஹமிட் என்ற அந்த மாஜிஸ்திரேட், குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு 58 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் ராட்ஷி ஹருண் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.