நீர் மாசுப்பாடு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 4 இயக்குநர் உட்பட ஐவர் விடுதலை

கோலாலம்பூர், ஜன. 17-


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கில் வரலாறு காணாத வகையில் நீர் விநியோகத் தடை ஏற்படும் அளவிற்கு ரவாங், சுங்கை கோங் ஆற்றில் அபாயகர ரசாயனப்பொருட்களை கொட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்து கனரக வாகன பட்டறையின் நான்கு இயக்குநர்கள் உட்பட ஐவரை செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று பிற்பகலில் விடுதலை செய்தது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நான்கு வாரிய இயக்குநர்களும், ஒரு நிர்வாகியும், சுங்கை கோங் ஆற்றில் அபாயரமான ரசாயனப் பொருட்களை கொட்டினார்கள் என்பதற்கு அடிப்படை முகாந்திரங்களை நிரூப்பிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி நோர் ராஜியா மாட் ஜின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் நிறுவனத்தின் 4 இயக்குநர்களும் சகோதரர்களுமான 58 வயது யிப் கொக் வாய், 63 வயது யிப் கொக் முன், 55 வயது யிப் கொக் குயின் , 65 வயது யிப் கொக் வெங் மற்றும் சம்பந்தப்பட்ட பட்டறையின் நிர்வாகியான 64 வயது ஹோ வூன் லியோங் ஆகிய ஐவரை விடுதலை செய்வதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 லட்சம் ரிங்கிட் அபராதத் தொகை மற்றும் அவர்களின் கடப்பிதழை திரும்ப ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2020 ஆம்ஆ ண்டு செப்டம்பர் 2 மற்றம் 3 ஆம் தேதி ஏற்பட்ட நீர் மாசுப்பாட்டினால் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஐந்து நாட்களுக்கு மேல் நீர் தடை ஏற்பட்டு, பல லட்சம் பேர் நீரின்றி பெரும் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

WATCH OUR LATEST NEWS