கெந்திங் ஹைலண்ட்ஸ், ஜன.17-
கெந்திங் ஹைலண்ட்ஸ், ஜாலான் ஆம்பர் கோர்ட் மற்றும் லோன் டி எலமனில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. எனினும் உயிர், பொருட் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 2.27 மணியளவில் கெங்திங் ஹைலண்ட்ஸ் போலீஸ் நிலையம் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹான் முகமட் கஹார் தெரிவித்தார்.
சாலையின் இரு மருங்குகளிலும் குவிந்துள்ள மண்ணை, அகற்றும் பணி துரித வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.