கோலாலம்பூர், ஜன. 17-
கொக்கெய்ன் போதைப்பொருளை பதப்படுத்தும் தொழிக்கு 5 ஆயிரம் ரிங்கிட் சம்பளத்தில் அந்நியத் தொழிலாளர் ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை, கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமா தொழிற்பேட்டைப் பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அந்நிய நாட்டவர், போதைப்பொருளை நெருப்பில் காய்த்துக்கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக காவ் கோக் சின் குறிப்பிட்டார்.
ஹாங் காங் பிரஜையான 27 வயதுடைய அந்த ஆடவர், பிரிட்டன் கடப்பிதழை கொண்டு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இச்சோதனையின் போது கொக்கெயின் என நம்ப்படும் 2.19 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.