கார் கால்வாயில் விழுந்ததில் ஆடவர் மரணம்

மூவார், ஜன. 17-


கார் ஒன்று சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததில் ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜோகூர், மூவார், பாரிட் ஜாவா, பாரிட் லிம்போங்கில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில் புரோட்டோன் ஈஸ்வரா காரை செலுத்திய 32 வயது நபர், மூச்சுத் திணறலுக்கு ஆ ளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராயிஸ் முக்லிம் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

அந்த ஆடவரை காப்பாற்றும் முயற்சியில் பொது மக்கள் ஈடுபட்ட போதிலும் பலன் அளிக்கவில்லை என்றார் அவர்.

WATCH OUR LATEST NEWS