கோலாலம்பூர், ஜன.17-
மக்கள் நடமாட்டமிகுந்த பரபரப்பான சாலைப்பகுதியில் வாகனத்தை அபாயகரமாக செலுத்தியதுடன், போக்குவரத்துப் போலீசாரை மோத முற்பட்டதாக நம்பப்படும் மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த புதன்கிழமை கோலாலம்பூர் ஜாலான் இம்பி – ஜாலான் சுல்தான் சாலை சந்திப்பில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அவ்விடத்தில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராவின் பதிவை அடிப்படையாக கொண்டு 38 வயதுடைய அந்த மாது கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுல்ஸ்மி அப்பெண்டி சுலைமான் தெரிவித்தார்.
அந்த மாது இரண்டு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.