சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிய ஷிப்ட் முறைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்

கோலாலம்பூர், ஜன.17-


பொது சுகாதார சேவையில் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களை தொடர்ச்சியாக 18 மணிநேர வேலை நேரமாகக் கட்டுப்படுத்தும் சுகாதாரப் பணியாளர்களுக்கான திட்டமிடப்பட்ட புதிய ஷிப்ட் முறையை குறைகூறி, ரத்து செய்யும்படி கோருவதற்கு முன்னர் அதன் அமலாக்கத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஏழு மருத்துவமனைகளில் அமல்படுத்தப்படவுள்ள ” Waktu Bekerja Berlainan அல்லது WBB என்று சுருங்க அழைக்கப்படும் வெவ்வேறு வேலை நேர முறையானது, சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் என்று பினாங்கு, சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரான டாக்டர் லிங்கேஸ்வரன் கூறினார்.

மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பெறும் மொத்த ஆன்-கால் அலவன்ஸ்கள் குறைவாக இருப்பதாக கூறப்படும் விவகாரம், இந்த புதிய முறையின் கீழ் களையப்பட்டு இருப்பதையும் டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

WBB இன் கீழ், பணி நேர வரம்பானது, / தற்போதைய On- call கடமைகளில் இருந்து வரும் 24 முதல் 33 மணிநேரங்களை விடக் குறைவாகும்,

இவ்விவகாரத்தில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr Akmal Salleh சுகாதார அமைச்சை தாக்குவதற்கு முன்பு WBB இன் முன்மொழிவு விவரங்களை கூர்ந்து கவனித்து இருக்க வேண்டும் என்றார் டாக்டர் லிங்கேஸ்வரன்.

” அக்மாலின் எதிர்வினையாது, பொதுவான வாதம் போல் உள்ளது என்று FMT க்கு அளித்த பேட்டியில் டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

24 மணிநேர ஆன்-கால் அலவன்ஸ் தொகை 220 ரிங்கிட் என்பதை இதனை எதிர்ப்பவர்கள் உணரத் தவறிவிட்டனர், அதே நேரத்தில் WBB இன் கீழ், மருத்துவர்கள் 15 மணிநேரத்திற்கு 275 ரிங்கிட் பெறுவார்கள். இது ஒவ்வொரு active call அழைப்புக்கும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பாகும்.

கூடுதல் அலவன்ஸ் தொகை , விடுமுறை மற்றும் இதர அனுகூலங்களை WBB வேலை முறை, வழங்குகிறது. இதற்கு மேலாக குறைந்த நேர வேலை நேரம் மருத்துவர்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது.

குறிப்பாக தங்கள் குடும்பங்களுடன் மதிப்புமிக்க அதிக நேரத்தை செலவிட முடியும் என்றும், இது மருத்துவ அதிகாரிகள் மத்தியில் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் லிங்கேஸ்வரன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS