நிச்சயமற்ற தன்மைகளை மலேசியாவினால் சமாளிக்க இயலும்

லண்டன், ஜன. 18-


வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தினால் எழும் எந்தவொரு அரசியல் அல்லது பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளையும் மலேசியாவினால் சமாளிக்க முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள் ஏற்படும் என்பதை இப்போதைக்கு கணிப்பது என்பது இயலாத காரியமாகும் என்று லண்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் சீனாவுடன், மலேசியாவும் ஆசியானும் பல தசாப்தங்களாக இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறிய டத்தோஸ்ரீ அன்வார், மற்ற நாடுகளுடனான உறவுகளில் மலேசியா தொடர்ந்து நடுநிலைக் கொள்கையைப் பேணும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவின் மிகப்பெரிய முதலீட்டாளராக அமெரிக்கா தொடர்ந்து இருக்கும் அதே வேளையில், கூகிள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் நாட்டில் பெரிய முதலீடுகளைச் செய்து வருவதால் சீனா, மலேசியாவின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக மாறியுள்ளது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS