காஜாங், ஜன. 18-
காஜாங், செமினி, ரெசிடென்ஸி தாமான் அங்கெரிக் பெர்டானாவில் உள்ள தனது வீட்டில் கடந்த புதன்கிழமை முதல் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டு இருக்கும் 14 வயது இளம் பெண் லாவண்யாவை தேடிக்கண்டு பிடிப்பதில் பொது மக்களிள் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.
லாவண்யா காணாதது குறித்து அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்துள்ளார்.
150 செண்டிமீட்டர் உயரம், 60 கிலோ எடை, மெல்லிய உடல் வாகுவை கொண்ட லாவண்யா குறித்து தகவல் கொண்டிருப்பவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு ஏசிபி நஸ்ரோன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தவிர 03-8911 4222 என்ற தொலைபேசி எண்ணில் காஜாங் மாவட்ட போலீஸ் நிலையத்தின் நடவடிக்கை அறையுடனும் பொது மக்கள் தொடர்புக்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.