பெல்ஜியத்திற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார் பிரதமர்

கோலாலம்பூர், ஜன. 18-


பிரிட்டனுக்கான அலுவல் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு நாள் அலுவல் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவிற்கு பிரதமராக பொறுப்பேற்றப்பின்னர் டத்தோஸ்ரீ அன்வார், பெல்ஜியத்திற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகை இதுவாகும் என்று வெளியுறவு அமைச்சராக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையில் இரு வழி உறவை வலுப்படுத்திக்கொள்ளும் பொருட்டு பிரதமரின் இந்தப் பயணம் அமையவிருக்கிறது என்று விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது

WATCH OUR LATEST NEWS