பெட்டாலிங்ஜெயா, ஜன. 18-
நாட்டின் முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றான பெட்டாலிங் ஜெயா பல்லைக்கழக மருத்துமனை, கடந்த ஜனவரி முதல் தேதியிலிருந்து மருத்துவ சேவைக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதில் தமக்கு உடன்பாடுயில்லை என்று தொடர்புத்துறை அமைச்சரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த கட்டண உயர்வு குறித்து தம்முடன் விவாதிக்கப்படவில்லை என்று ஃபாஹ்மி குறிப்பிட்டார்.
தனிப்பட்ட முறையில் இந்த கட்டண உயர்வில் தமக்கு உடன்பாடுயில்லை என்பதையும் அவர் விளக்கினார்.
ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்த புதிய கட்டண முறைப்படி மருத்துவ சேவைக்கான கட்டணங்களை அந்தப் பல்கலைக்கழக மருத்துவமனை 70 விழுக்காடு வரை உயர்த்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த மருத்துவமனையில் சிகிச்சைப்பெறக்கூடிய சாமானிய மக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதே தமது முதன்மை சிந்தனையாக தற்போது இருந்து வருகிறது என்று ஃபாஹ்மி விளக்கினார்.