லண்டன், ஜன. 18-
பிரிட்டனுக்கு தாம் மேற்கொண்ட ஐந்து நாள் அலுவல் பயணத்தில் 11 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகள் கவரப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி, இலக்கவியல் பொருளாதாரம் உட்பட பல்வேறு து றைகளுக்கான முதலீடுகளை மலேசியா கவர்ந்து இருப்பதாக இன்று லண்டனில் மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்ண்டவாறு கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஏற்றுமதிக்குரிய வாய்ப்புகள் பெறப்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார். உபகரணங்கள், விமான உபரிபாகங்கள், தளவாடங்கள், உணவு மற்றும் பானம் என 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஏற்றுமதிக்கு வகை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.