தங்காக், ஜன. 18-
ஜோகூர், தங்காக் மாவட்ட போலீஸ் நிலையத்தின் தடுப்புக்காவலிலிருந்து தப்பிச் சென்ற விசாரணை கைதியை போலீசார் வெற்றிகரமான மீண்டும் பிடித்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்த 38 வயதுடைய அந்த விசாரணை கைதி, கடந்த புதன்கிழமை மிக லாவசமாக தப்பிச் சென்றுள்ளான்.
அந்த கைதியை பிடிப்பதற்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில் அந்த நபர் இன்று காலை 10.50 மணியளவில் குளுவாங்கில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த நிலையில் போலீசார் வளைத்துப் பிடித்தனர் என்று தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.
அந்த விசாரணைக் கைதியை பிடிப்பதில் பொது மக்கள் வழங்கிய தகவல் பேருதவியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.