மேலும் 4 வங்கி அதிகாரிகள் கைது

கோலாலம்பூர், ஜன. 18-


நிதி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த கும்பலுடன் கூட்டு சேர்ந்து அரசாங்க ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக கடன் பெற்றுக்கொடுத்த மோசடி சம்பவம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்டு வரும் ஓப் ஸ்கை நடவடிக்கையில் மேலும் 4 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு வங்கி அதிகாரிகளும், ஆகக்கடைசியாக பிடிப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழிகள் ஆவர் என்று அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இத்துடன் இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

கடைசியாக பிடிபட்ட நான்கு பேரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS