குரியர் நிறுவனத்தின் 7 பணியாளர்கள் கைது

கோலாலம்பூர், ஜன. 18-


பொருட்களை வாடிக்கையாளர்களிடம் பட்டுவாடா செய்யும் கூரியர் நிறுவனத்தின் 7 பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டிய பொட்டலங்களைப் பிரித்து, சில பொருட்களை களவாடியது தொடர்பில் அந்த 7 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலாலம்பூர், தாமான் இண்டா செராஸை தளமாக கொண்ட அந்த கூரியர் நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான பொட்டலங்கள் பிரிக்கப்பட்ட சம்பவத்தில் 21 ஆயிரத்து 818 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முகமட் அஸாம் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்பில் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நெகிரி செம்பிலான் நீலாயில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த எழுவரும் பிடிபட்டதாக முகமட் அஸாம் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS