அனைத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளும் ஆசியான் கூட்டமைப்பில் அங்கம் பெற தகுதியானவையே

ஜன. 19-

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முழு பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம் ஆசியான் தனது உள்ளடக்கிய கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மலேசியா வலியுறுத்தியுள்ளது. லங்காவி ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசன் குறிப்பிடுகயில், தென்கிழக்கு ஆசியா 10 நாடுகள் மட்டுமல்ல, 11 நாடுகள் கொண்டது என்றும், வட்டாரத்தின் நலனுக்காகச் செயல்படும் அமைப்பில் அனைத்து நாடுகளும் முழுமையாகப் பங்கேற்க உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக, பார்வையாளர் அந்தஸ்தில் இருக்கும் கிழக்கு திமோரை முழு உறுப்பினராக இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆசியானின் நம்பகத்தன்மை அதன் கொள்கைகளை நிலைநிறுத்துவதில்தான் உள்ளது என்று முகமட் ஹசன் குறிப்பிட்டார். வெறும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், அவை செயல் வடிவம் காஅ வேண்டும் என்றும், உள்ளடக்கிய தன்மையை வெளிக்காட்டாவிட்டால் அனைத்து பேச்சுக்களும் வெற்று வார்த்தைகளாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார். கிழக்கு திமோர் கடந்த 2005 முதல் ஆசியானில் பார்வையாளராக உள்ளது. வட்டார பொருளாதார வளர்ச்சிக்கும், ஆசியானின் நீண்டகால இலக்குகளை அடையவும் கிழக்கு திமோரின் முழுமையான பங்கேற்பு அவசியம் என்று மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS