மதுபான விற்பனைத் தடையை விருப்பம் போல் அமல்படுத்த முடியாது

ஜன. 20-

மதுபான விற்பனைத் தடையை ஊராட்சி மன்றங்கள் அல்லது மாநகர் மன்றங்கள் தங்களின் மனம் போன போக்கில் அமல்படுத்த முடியாது என்று முன்னாள் செனட்டர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.

எந்த இடத்தில் மதுபானம் விற்க முடியும், விற்க கூடாது, அங்கே யார் வாழ்கிறார்கள், யாருக்கு மதுபானம் பொருந்தாது என்பதை முடிவு செய்வதற்கு ஊராட்சி மன்றங்களுக்கும், மாநகர் மன்றங்களுக்கும் யார் அதிகாரம் வழங்கியது என்று மசீச முன்னாள் செனட்டர் Ti Lian Ker கேள்வி எழப்பினார்

மதுபான விற்பனை என்பது சுங்கத்துறையின் கலால் வரிக்கு உட்டபட்டதாகும். மதுபான விற்பனை சிறார்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது என்று சட்டம் வலியுறுத்துகிறது.

இதனைதான் ஊராட்சி மன்றங்களும், மாநகர் மன்றங்களும் அமல்படுத்த வேண்டுமே தவிர எந்தெந்த இடத்தில் மதுபானம் விற்படக்கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை மாநகர் மன்றத்திற்கும், ஊராட்சி மன்றங்களுக்கும் இல்லை என்று செனட்டர் Ti Lian Ker வலியுறுத்தினார்.

ஈப்போ மாநகர் மன்றத்திற்கு உட்பட்ட இடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கின்ற பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை செய்யப்படும் என்று அதன் மாநகர் மன்றத் தலைவர் அறிவித்து இருப்பது தொடர்பில் Ti Lian Ker எதிர்வினையாற்றினார்.

WATCH OUR LATEST NEWS