ஜன. 20-
புறநகர் மக்கள் உட்பட ஒவ்வொரு பிரஜையும், மிகத் தரமான, வாழ்க்கை நிலையை கொண்டிருப்பதை உறுதி செய்யும் சிலாங்கூர் அரசின் இலக்கிற்கு ஏற்ப மக்களிடையே ஏழ்மை நிலையை துடைத்தொழிப்பதில் மாநில அரசாங்கம் தொடர்ந்து முழு வீச்சில் போராடி வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் வறுமை நிலையை துடைத்தொழிக்கும் முயற்சியாக புறநகர் மக்களுக்கு சுய வளர்ச்சிக்கான பல்வேறு மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்கி வருவதையும் பாப்பாராய்டு சுட்டிக்காட்டினார்.
புறநகர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருட்டு இந்த முன்முயற்சிக்கான வாய்ப்புகளை சிலாங்கூர் அரசு வழங்கி வருவதாக தமது சட்டமன்றத் தொகுதியான பந்திங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாப்பாராய்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.