ஜன. 20-
திரெங்கானு, கெமாமானில் உள்ள உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவரை கண்மூடித்தனமாக அடித்ததாக கூறப்படும் ஆடவரை விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு Chukai மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
அந்த மாற்றுத் திறனாளி, எதிர்த்துப் போராட முடியாமல், கடும் தாக்குதலுக்கு ஆளான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்ககளில் வைரலானதைத் தொடர்ந்து அச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் ஒரு வணிகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இன்று தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு மாஜிஸ்திரேட் Sharifah Amirda Shasha Amir அனுமதி அளித்தார்.