முன்னாள் சட்டத்துறை தலைவரை குறைகூற வேண்டாம்

ஜன. 20-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், தனது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க வேண்டும் என்று அரசாணை உத்தரவு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் சட்டத்துறை தலைவர் Ahmad Terirudin Mohd Salleh-வை குறை கூற வேண்டாம் என்று முன்னாள் சட்டத்துறைத்துறை அமைச்சர் Zaid Ibrahim கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு சட்ட வல்லுநரான Ahmad Terirudin, இவ்விவகாரத்தில் மேலிட உத்தரவுக்கு அணிபணிந்து இருக்கக்கூடும் என்று கோத்தாபாரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Zaid Ibrahim வலியுறுத்தினார்.

நஜிப்பிற்கு அரசாணை உத்தரவு ஒன்று இருக்கும் பட்சத்தில் நாட்டின் சட்டத்துறைக்கு தலைமையேற்றுள்ள அட்டர்னி ஜெனரல் என்ற முறையில் அவ்விவகாரத்தை மூடி மறைத்ததற்காக Ahmad Terirudin, தற்போது வகித்து வரும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பதவியை துறக்க வேண்டும் என்று நஜீப்பின் முதன்மை வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் Zaid Ibrahim மேற்கண்டவாறு கூறினார்.

சட்டத்துறையின் பாதுகாவலான விளங்கும் சட்டத்துறை தலைவர், ஒரு முக்கியமான விவகாரத்தை எவ்வாறு மறைத்து இருக்க முடியும், இதனால், அவருக்கு என்ன லாபம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று Zaid Ibrahim கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS