பழைய சட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன

ஜன. 20-

மனித வள அமைச்சின் கீழ் தொழிலாளர்கள் தொடர்புடைய 28 சட்டங்கள், நடப்புத் தேவைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்கு அந்த சட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு சில பணிக்குழுக்களை அமைக்கும் நடைமுறை தற்போது பரிசீலனையில் இருந்து வருவதாக மனித வள அமைச்சர் Steven Sim தெரிவித்துள்ளார்.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் அந்த சிறப்புப்பணிக்குழுக்களை அமைப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளரை தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

இந்த குழுவில் அமைச்சின் அதிகாரிகள் மட்டுமின்றி தொழிற்சங்கப் பொறுப்பாளர்களும் இடம் பெற்று இருப்பர் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS