சீனப்புத்தாண்டை முன்னிட்டு இலவச ஷட்டல் பேருந்து சேவை

பினாங்கு, ஜன. 20-


வரும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு கோம்தாருக்கும், புக்கிட் பெண்டேரோ கொடி மலைக்கும் இடையில் இலவச ஷட்டல் பேருந்து சேவை விடப்படும் என்று கொடி மலையை நிர்வகித்து வரும் பினாங் ஹில் கார்ப்பரேஷன் கழகம் அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையில் 5 தினங்களுக்கு இந்த இலவச ஷட்டல் பேருந்து சேவை, புழக்கத்தில் இருக்கும் என்று கொடி மலை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோம்தாரில் 9 ஆவது பேருந்து நிறுத்தத்திலிருந்து விடப்படும் இலவச ஷட்டல் பேருந்து, ஜாலான் ரியா வாயிலாக கொடி மலையை சென்றடையும்.

சீனப்புத்தாண்டையொட்டி பினாங்கில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இலவச ஷட்டல் பேருந்து சேவை விடப்படுவதாக அந்த கழகம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS