பெல்ஜியம் பிரதமரை சந்தித்தார் டத்தோஸ்ரீ அன்வார்

பிரசல்ஸ், ஜன. 20-


ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திற்கு இரண்டு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தலைநகர் Brussels-ஸில் அந்நாட்டு பிரதமர் அலெக்சண்டர் டி ரூவை சந்தித்தார்.

இச்சந்திப்பு, அலெக்சண்டர் டி ரூவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இரு பிரதமர்களின் அதிகாரிகளும் இச்சந்திப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முதலீடு, வாணிப தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருல் அஸிஸ், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதீர், மற்றும் தோட்டம், மூலத் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி ஆகியோர் பிரதமருடன் இந்த சந்தப்பில் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS