சுகாதாரக்கேடு: கோழிப்பண்ணையை மூட உத்தரவு

தஞ்சோங் சிப்பாட், ஜன. 20-


சிலாங்கூர், கோல லங்காட், கம்போங் லாடாங் பத்துவில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈக்களின் படையெடுப்பு, ஓரிட மக்களுக்கு பெரும் தொல்லையாக மாறியது மட்டுமின்றி சுகாதாரக் கேட்டிற்கு வித்திட்டதால் அந்த கோழிப்பண்ணை இனி செயல்படுவதற்கு இனி அனுமதியில்லை என்று தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.

அந்த கோழிப்பண்ணையை சுத்தம் செய்யுமாறு ஏற்கனவே அதன் உரிமையாளருக்கு எச்சரிக்கையும் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் அதனை அவர் பொருட்படுத்தவில்லை என்று பெர்ஹான் அமான் ஷா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS