சிரம்பான், ஜன.20-
வருகின்ற சீனப்புத்தாண்டை முன்னிட்டு மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் பயணத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 2 லட்சத்து 70 ஆயிரம் டிக்கெட்டுகளில் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
நீண்ட விடுமுறையையொட்டி கோலாலம்பூருக்கும், பட்டர்வொர்த்துக்கும் லொக்கோமொட்டிவ் ரயில் சேவையில் நாள் ஒன்றுக்கு கூடுதலாக இரண்டு சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இருவழி டிக்கெட்டுகள் அதிகமாக விற்பனை செய்யப்படவில்லை. மாறாக, அதிகமானோர் கிராமங்களுக்கு திரும்புவதறகு ஒருவழி டிக்கெட்டுகளையே வாங்கியுள்ளனர் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இன்று சிரம்பானில் EMU KTMB Depoh- வில் ETS Class 93 ரயிலை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.