புத்ராஜெயா, ஜன.20-
கடந்த 2019 ஆம் ஆண்டு தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த பசார் மலாம் வியாபாரி ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஒன்பது ஆண்டு சிறை மற்றும் 3 பிரம்படித் ண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ பி. ரவீந்திரன், 38 வயதுடைய அந்த வியாபாரிக்கான தண்டனையை நிலைநிறுத்துவதாக தீர்ப்பில் தெரிவித்தார்.
எனினும் தண்டனையை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறை செய்வதற்கு ஏதுவாக அந்த பசார் மாலாம் வியாபாரியை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு ரவீந்திரன் அனுமதி அளித்தார்.