ஈப்போ, ஜன.20-
கடந்த சனிக்கிழமை, ஈப்போ, தாமான் ரியாவில் வீட்டின் முன்புறம் தனது வளர்ப்பு நாயை, ஈவிரக்கமின்றி சுத்தியலால் அடித்ததாக கூறப்படும் மெக்கானிக் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற புகாரின் அ டிப்படையில் 42 வயது மதிக்கத்தக்க அந்த மெக்கானிக் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அ பாங் அகமட் தெரிவித்தார்.
தனது வளர்ப்பு நாய், தன்னை கடித்து விட்டது என்பதற்காக அந்த மெக்கானிக், அந்த நாயை சுத்தியலால் அடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாய் தாக்கப்படும் சம்பவத்தை வீடியோ படம் எடுத்த அண்டை வீட்டுக்காரர், அந்த காணொளியை வைரலாக்கியத்தைத் தொடர்ந்து, அந்த ஆடவரின் செயலுக்கு பிராணிகள் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.