குவாமூசாங், ஜன. 20-
மோட்டார் சைக்கிளில் பயணித்த தோட்டத் தொழிலாளர் ஒருவர், சாலையில் திடீரென்று காணப்பட்ட குழியை தவிர்ப்பதற்கு முயற்சித்த போது, பிக்காப் வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று காலை 7.50 மணியளவில்ர குவா மூசாங், பாலோ 1 இல் நிகழ்ந்தது. 30 வயது மதிக்கத்தக்க அந்த தோட்டத் தொழிலாளர் கடுமையான காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் பூ தெரிவித்தார்.