மாற்றுத் திறனாளி தாக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் புகார் மீட்டுக்கொள்ளப்படாது

கெமாமான், ஜன. 20-


திரெங்கானு, கெமாமானில் உழவர் சந்தையில் மாற்றும் திறனாளி ஒருவர், கண்மூடித்தமான தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளப் போவதில்லை என்று அந்த மாற்றுத் திறனாளியின் மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்காக மன்னிப்புக்கூட கேட்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக 44 வயது பரிடா அப்துல் கரீம் என்ற அந்த மாது தெரிவித்தார்.

மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தனது கணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தாங்கள் மிகுந்த மனவலியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS