சபாபெர்ணம், ஜன. 20-
சிலாங்கூர், பெக்கன் சுங்கை பெசார், பகுதியில் மம்மி பாணியில் நடமாடி வந்த ஓர் ஆடவர் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆடவர் மன நலம் பாதிப்புக்கு ஆளானவர் என்பது தெரியவந்துள்ளதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட் ரோபின் குகா தக்குர்தா தெரிவித்துள்ளார்.
அந்த ஆடவர் மம்மி பாணியில் நடமாடி வருவது தொடர்பான காணொளி, இன்று காலை 10 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்த இது குறித்து அதிகமானோர் விளக்கம் கேட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
26 வயதுடைய அந்த ஆடவர் இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை பெசார், பாரிட் 6 இல் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் தற்போது சபா பெர்ணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இன்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சூப்ரிண்ட். Robin விளக்கம் அளித்துள்ளார்.