பினாங்கு, ஜன. 21-
மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், மலேசிய திராவிடர் கழக முன்னோடி தலைவருமான டத்தோ ச.த.அண்ணாமலை காலமானார். அவருக்கு வயது 78.
சிறிது காலமாக உடல் நலமின்றி இருந்து வந்த டத்தோ அண்ணாமலை, நேற்று திங்கட்கிழமை மாலை மணி 7:25 க்கு, பினாங்கு, புக்கிட் மெர்த்தாஜம் மருத்துவமனையில் தமது இறுதி மூச்சை விட்டார்.
அன்னாரது நல்லுடல் எண், 4-19 Blok B Pangsapuri Widuri Jalan Cempa, Butterworth என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் உறவினர், கழகத் தோழர்கள், நண்பர்களின் இறுதி மரியாதை அஞ்சலிக்குப் பின் நாளை புதன்கிழமை மதியம் 12:00 மணிக்கு மேல் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி சுயமரியாதை முறைப்படி மலேசியத் திராவிடர் கழகம், பினாங்கு திராவிடர் கழகம், மாக் மண்டின் திராவிடர் கழக ஏற்பாட்டில் இறுதி மரியாதை நிகழ்வு நடைபெறும்.
பின்னர் அன்னாரது நல்லுடல் பினாங்கு, செபராங் பிறை தெங்கா , புக்கிட் மெர்த்தாஜம், பெராப்பிட்t மின் சுடலையில் தகனம் செய்யப்டும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.