அலோர்ஸ்டார், ஜன. 21-
கெடா, அலோர்ஸ்டார், ஜாலான் கம்போங் தொங்காங் அருகில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு ஆடவர்கள் கருகி மாண்டனர்.
அதிகாலை 6.50 மணியளவில் ஏற்பட்ட இத்தீச் சம்பவத்தில் 23 வயது மற்றும் 61 வயது இரு நபர்கள், தப்பிக்க இயலாமல், தீயின் ஜுவாலையின் மத்தியில் சிக்கி உயிரிழந்ததாக கெடா மாநில தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி அஸார் முகமட் தெரிவித்தார்.